Gadgets

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி டேப் எஸ்6 லைட் சாதனத்தை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது,

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் 10.4 இன்ச் WUXGA TFT டிஸ்பிளேவினையும், 2000 × 1200 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த டேப்லெட் மாடல் ஆனது 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9611 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

மேலும் இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் அறிமுகம்.!

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலின் பின்புறத்தில் 8எம்பி ஆட்டோஃபோகஸ் கேமராவினையும், முன்புறத்தில் 5எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் இது, மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரியினை நீட்டிக்கும் வசதியைக் கொண்டுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடல் 7040எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் ஆதரவு மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

32′ இன்ச் மற்றும் 43′ இன்ச் அளவுகளில் வெளியாகியுள்ள இன்பினிக்ஸ் நிறுவனத்தின் X1 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கள்!!

TechNews Tamil

முன்பதிவினைத் துவக்கிய ஹூவாமி நிறுவனத்தின் அமேஸ்பிட் ஜிடிஆர் 2 ஸ்மார்ட்வாட்ச்!!

TechNews Tamil

75 இஞ்ச் டிஸ்பிளேவுடன் ஸ்மார்ட் டிவியினை அறிமுகம் செய்த சியோமி!!

TechNews Tamil