சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எம்30எஸ் மற்றும் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. பின்பு 2340 x 1080 பிக்சல் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
கேமிராவைப் பொறுத்தவரை பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் உள்ளன.

மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்றவையும் அடங்கும். மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தில் இயங்கக் கூடியது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி+ 5எம்பி டூயல் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவும் உள்ளது. மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி இதில் உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம10எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.