Mobile

அறிமுகமானது அசரவைக்கும் அம்சங்களுடன் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளேவினையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, ஆக்டா கோர் பிராசஸர் வசதி கொண்டதாகவும், ஆண்ட்ராய்டு 10  இயங்குதளம் கொண்டு இயங்குவதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இது பின்புறத்தில் 48 எம்பி குவாட் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 13 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது அசரவைக்கும் அம்சங்களுடன் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வசதியினையும்,  4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வசதியினையும் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் வசதியினையும் கொண்டுள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் இது 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு இயங்குவதாய் உள்ளது.

Related posts

சர்வதேச சந்தையில் வெளியாகியுள்ள ரெட்மி நோட் 9டி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி ஆஃபர்.!

TechNews Tamil

பாகிஸ்தானைத் தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகவுள்ள விவோ ஒய் 51 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil