ஜியோவின் ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சேவை இன்று அறிமுகம் ஆகவுள்ளது. 2018 ஆம் ஆண்டின் பொது கூட்டத்தில், ஜியோஃபைபர் சேவையானது இந்தியாவில் பல நகரங்களில் ரூ.2500 என்கிற செக்யூரிட்டி டெபாசிட் உடன் சோதனை செய்யப்பட்டு வந்தது. அந்த சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ‘ப்ரிவியூ கஸ்டமர்கள்’ என்று பெயர்.
ப்ரிவியூ
கஸ்டமர்கள்,
இன்று அறிமுகத்தின்போது அடுத்த 2 மாதங்களுக்கு ஜியோ ஃபைபர் சேவைக்கு கட்டணம் இலவசம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோஃபைபரின் அறிமுகத்திற்குப் பிறகு வாடிக்கையாளர்கள் அவர்கள் செலுத்திய செக்யூரிட்டி டெபாசிட்டை திரும்பி பெற்றுக்கொள்ளலாம்.
ஜியோ ஃபைபர் திட்டங்கள் ஆனது இலவச குரல் அழைப்புகள் மற்றும் 100Mbps தொடங்கி 1Gbps வரையிலான டேட்டா வேகம் ஆகியவற்றை வழங்கும் என்றும் தெரிகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ஒரு ஜியோ ஃபைபர் அறிமுக சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு 4 கே செட்-டாப்-பாக்ஸுடன் இலவச எச்டி அல்லது 4 கே டிவி கிடைக்கும். இது வருடாந்திர ஜியோ ஃபாரெவர் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.