Apps

கூகுள் டுயோவில் குடும்ப உறுப்பினர்களுக்கான Familymode அறிமுகம்!!

கொரோனா ஊரடங்கால் பெரிய அளவில் பயன்பாட்டில் இருந்த ஜூம் செயலி பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு தொடர்ந்து ஆளானது. மேலும் அடுத்த கட்டமாக, பாதுகாப்புரீதியான பிரச்சினைகளை சந்தித்ததால், சிங்கப்பூர், மலேசியா உட்பட பல நாடுகளில் இதன் பயன்பாடு தடை செய்யப்பட்டது.

இந்தநிலையில் கூகுள் நிறுவனத்தின் டுயோ மூலம் வீடியோ கால்கள் பயன்பாட்டினை தற்போது பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் கூகுள் டுயோ குறித்த ஒரு சிறப்புமிக்க அம்சம் தற்போது வெளியாகியுள்ளது, அதாவது இதன் வீடியோகால் சேவையில்  Familymode என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கூகுள் டுயோவில் குடும்ப உறுப்பினர்களுக்கான Familymode அறிமுகம்!!

நேற்று கூகுள் டுயோவானது அதன் வீடியோ காலிங்க் லிமிட்டில் 32 நபர்கள்வரை பேசிக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

அதாவது தொழில்முறை வீடியோ கால் சேவையாக மட்டும் அல்லாமல் கூகுள் டுயோ ஆனது புதிய குடும்ப பயன்முறை சேவை என்ற சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது Familymode என்று பெயரிடப்பட்ட இந்த சேவையின் மூலம் குடும்ப உறுப்பினர்கள் வீடியோகால் சேவையினைப் பயன்படுத்தலாம்.

மேலும் இந்த சேவைகளுடன் கூடுதலாக சிறப்பு செய்திகளைப் பகிரக்கூடிய அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது, அதேபோல் வீடியோ தரத்தினையும் உயர்த்தியுள்ளது.

Related posts

வதந்திகளைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு மற்றும் வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ள சேவை!!

TechNews Tamil

ப்ளே ஸ்டோரில் 10 கோடி டவுண்லோடுகளை கடந்துள்ள கூகுள் மீட்!!

TechNews Tamil

வாட்ஸ்அப் செயலியினை அப்பட்டமாக காப்பி அடிச்ச சிக்னல் ஆப்!!

TechNews Tamil