Apps

கொரோனா பற்றிய தகவல்களுக்காக அறிமுகமாகியுள்ள ஃபேஸ்புக் மெசஞ்சர் சாட்பாட் சேவை!!

உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்துகிற கொரோனா வைரஸ் குறித்து பல வகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அதேபோல் ஒவ்வொரு நாட்டின் சுகாதார அமைப்பும், மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் செயல்பாடுகளை செய்து வருகிறது.

கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 7,37,929 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 35,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 1071 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் இதுகுறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை பேஸ்புக்கில் இலவச விளம்பரமாக ஒளிபரப்பு செய்ய அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு மையங்கள் பேஸ்புக்குடன் பேச்சு வார்த்தை நடத்தி அமலுக்குக் கொண்டு வந்தது.

அந்த வகையில் தற்போது ஃபேஸ்புக் நிறுவனமானது மற்றொருமொரு  மெசஞ்சர் சாட்பாட் சேவையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தி உள்ளது.

கொரோனா பற்றிய  தகவல்களுக்காக அறிமுகமாகியுள்ள ஃபேஸ்புக் மெசஞ்சர் சாட்பாட் சேவை!!

கொரோனா ஹெல்ப்டெஸ்க் சாட்பாட் எனப்படும் இந்த மெசஞ்சர் சேவை கொரோனா பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தல், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் மத்திய சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள், போலி செய்திகளை தடுத்தல் அவசர உதவி எண் போன்ற சேவைகளை வழங்குகிறது.

இந்தச் சேவை உண்மையில் இந்த நேரத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த சாட்பாட் சேவையை கொண்டு மக்கள் கொரோனா குறித்த உண்மைத் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வெறும் 10MB அளவில் ஆப்லைனில் இயங்கும் கூகுள் கேலரி ஆப் அறிமுகம்!

TechNews Tamil

பக்காவாக அறிமுகமானது கூகுள் மீட் மற்றும் கூகுள் டுயோவில் க்ரூப் கால் வசதி!!

TechNews Tamil

வாட்ஸ்அப் செயலியில் சோதனையில் உள்ள அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம்!!

TechNews Tamil