Apps

கேமிங் பிரியர்களைக் கவரும் வகையில் பேஸ்புக் கேமிங் அறிமுகம்

இன்றைய நவீன காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் இழுத்து ஒரு இடத்தில் கட்டிப்போடக்கூடிய ஒரு விஷயம் என்று ஒன்று உண்டு என்றால் அது கேமிங்காகவே இருக்கும்.

ஆமாங்க ஸ்மார்ட்போனில் இருக்கும் பெரும் பயன்பாடாக கேமிங்கே உள்ளது, கேமிங்கிற்கு இருக்கும் வரவேற்பு காரணமாகவே அனிமேஷன் நிறுவனங்களும் கேமிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன.

அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் இடத்தினை ஆக்ரமித்துள்ள பேஸ்புக்கும் கேமிங் தொழில்நுட்பத்தில் கால் பதித்துள்ளது.

அதாவது பேஸ்புக் நிறுவனத்தின் பேஸ்புக் கேமிங் சேவை மற்ற கேமிங் முறைகளைவிட மாறுபட்டதாக உள்ளது. அதாவது இந்த கேமிங்கினைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட ரீதியில் கிளவுட் பயன்முறை சார்ந்த கேம்களை டவுன்லோட் செய்யத் தேவையில்லை.

இதனை பேஸ்புக் செயலி அல்லது பிரவுசர் மூலமாக விளையாடலாம் என்பதே கூடுதல் சிறப்பம்சமாக உள்ளது.

மேலும் இது தற்போதைக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பயனர்கள் மத்தியில் இது மிகப் பெரும் வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

கூகுள் பிளே ஸ்டோரில் பயனர் விவரங்களை திருடும் ட்ரோஜன் ரக செயலிகள்!!

TechNews Tamil

இன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்தார் சென்னையைச் சார்ந்த இளைஞர்!!

TechNews Tamil

ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2019: அதிரடியான தள்ளுபடிகள் அறிவிப்பு

TechNews Tamil