டி.சி.எல். நிறுவனத்தின் சி8 சீரிஸ் ஸ்மார்ட் டி.வி.க்கள் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளன. இந்த டிவிக்கள் ஆனது டி.சி.எல். சி8 4K ஏ.ஐ. டி.வி. சீரிஸ் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என்ற இரண்டு அளவுகளில் அறிமுகம் ஆகியுள்ளது.
1. டி.சி.எல். சி8 55 இன்ச் 4K டி.வி. விலை- ரூ. 49,990
2. டி.சி.எல். சி865 இன்ச் மாடல் விலை- ரூ. 69,990

இந்த டிவியினைப் பொறுத்தவரை 54.6 இன்ச் டிஸ்ப்ளே காணப்படும், மேலும் இது 3840×2160 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.
மேலும் இது 4K பேனல் கொண்டுள்ளது, டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யு.எஸ்.பி. 2.0 போர்ட், ஹெச்.டி.எம்.ஐ. 2.0, SPDDIF டிஜிட்டல் ஆடியோ ஆப்டிக்கல், 1 எக்ஸ் ஆடியோ அவுட், ஒரு ஈத்தர்நெட் போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இதில் டூயல் பேண்ட் வைபை, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், கூகுள் பிளே ஸ்டோர் வசதி, உள்ளது.
இது டூயல் கோர் பிராசஸர், டூயல் கோர் ஜி.பி.யு. மற்றும் ஆன்கியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இது ஏ.ஐ. ஃபார்-ஃபீல்டு குரல் அங்கீகார தொழில்நுட்பம் கொண்டுள்ளது.