பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிக அளவிலான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் அவ்வப்போது பயனர்களுக்கு வியக்கத்தக்க அம்சங்களை வழங்கி வருகிறது.
அந்தவகையில் தற்போது வாட்ஸ்அப் வெப் பதிப்பில் டார்க் மோட் வசதி, வாட்ஸ்அப் செயலியில் அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள், கியூ ஆர் கோட் மூலம் காண்டாக்ட்களை சேர்க்கும் வசதி, வீடியோ கால்களில் அதிகபட்சம் 8 பேருடன் உரையாடும் வசதி போன்ற அம்சங்களை வழங்கி உள்ளது.
வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் தீம் வசதி வழங்கப்பட உள்ளதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தகவல்கள் வெளியாகின.

அந்த வகையில் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு செயலிகளுக்கான பீட்டா வெர்ஷன் 2.20.12 மற்றும் ஐ.ஒ.எஸ். 2.20.30.25 பீட்டா வெர்ஷனில் டார்க் தீம் வசதி வழங்குவதற்கான முயற்சியில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் வெப் தளத்திற்கு வழங்குவதற்கான செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதனைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்து வாட்ஸ் ஆப் பணப்பரிமாற்றம் செய்வதற்கான வாட்ஸ் ஆப் பே சேவையினை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.