கூகுள்
நிறுவனம் தற்போது ஜிமெயில் பயனர்களுக்கு டார்க் மோட் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
மேலும் கூகுள் நிறுவனம் அண்மையில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் சார்ந்த அறிவிப்பை வெளியிட்டது. தற்போது எவ்வித முன்னறிவிப்பின்றி, ஜிமெயில் பயனர்களுக்கு டார்க் மோட் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

ஆண்ட்ராய்டு 10 ஆபரேடிங்க் சிஸ்டத்தில் பல வகையான புதிய வசதிகள் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது ஜிமெயில் தளத்திற்கு டார்க் மோட் வசதியை அறிமுகம் செய்துள்ளது. தற்சமயம் இந்த டார்க் மோட் வசதி அனைவருக்கும் கிடைக்கவில்லை, ஜிமெயில் ஆப்பின் சமீபத்திய அப்டேட் ஆன 2019.08.18 வெர்ஷனின் கீழ் மட்டுமே இந்த தீம் காணப்படுகிறது. இதன் வழியாக டார்க் மோட் அம்சமானது மிக விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஜிமெயில் தளத்தில் டார்க் மோட் அம்சம் மட்டுமின்றி குவிக் ஸ்விட்சிங் என்னும் அம்சமும் வெளியாகியுள்ளது.
பல ஜிமெயில் அக்கவுண்ட்களை பயன்படுத்தும் போது அனைத்தையும் வேகமாக பயன்படுத்த இது உதவும்.