ஹானர் நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவியை மிக விரைவில் இந்திய சந்தைக்கு கொண்டு வரும் என்பதை Honor India President ஆன சார்லஸ் பெங் ஒரு நேர்காணலில் உறுதிப்படுத்தியுள்ளார்.
“சமீபத்தில் தான் நாங்கள் எங்களின் புத்தம் புதிய Large-screen category மற்றும் Smart Vision Smart TV-க்களின் அறிமுகத்தை பற்றி அறிவித்தோம். இப்புதிய வகையின்கீழ் தயாராகும் எங்களின் முதல் ஸ்மார்ட் டிவி ஆனது வருகிற ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும், அதை நாங்கள் கூடிய விரைவில் இந்திய சந்தைக்கும் கொண்டு வரலாம்” என்றார் சார்லஸ் பெங்.

சார்லஸ் பெங்கின் கூற்றானது, பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்னரே ஹானர், இந்தியாவில் அதன் ஸ்மார்ட் டிவியை பெரிய அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதை சூசகமாக வெளிப்படுத்துகிறது.
இது தவிர வெளியாகவிருக்கும் ஹானர் ஸ்மார்ட் டிவியை பற்றி வேறெந்த விவரங்களும் தெரியவில்லை. ஆனால் ஹானர், Google-ன் Android TV OS-ஐ சார்ந்து அதன் சொந்த Custom interface-ஐ (அதாவது Xiaomi-யின் PatchWall-ஐ போன்று) வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலையை பொறுத்தவரை, நிச்சயமாக சியோமியின் வெற்றிகரமான மி டிவிக்களுடன் கடுமையாக
போட்டியிடும் வண்ணம் நிர்ணயம் செய்யப்படும்.