ஆப்பிள் நிறுவனம் தற்போது 13-இன்ச் மேக்புக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது, இதுகுறித்த விவரங்களை இப்போது நாம் பார்க்கலாம்.
இந்த ஆப்பிள் 13-இன்ச் மேக்புக் ப்ரோ (2020) மாடல் ஆனது மேஜிக் கீபோர்டு, 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
மேலும் இது 2560×1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. இந்த 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் 2000 ஜிபி எஸ்எஸ்டி வரை கான்ஃபிகர் செய்வதாய் உள்ளது.
இது 256ஜிபி எஸ்எஸ்டி வசதியினையும், 32GB 3733MHz LPDDR4X ரேம் வசதியையும் கொண்டுள்ளது.

இது பட்டர்ஃபிளை கீபோர்டுக்கு மாற்றாக மேஜிக் கீபோர்டு கொண்டதாகவும், டச் பார் மற்றும் டச் ஐடி வசதியுடன் எஸ்கேப் பட்டன் கொண்டுள்ளது.
1. என்ட்ரி லெவல் மாடல்- 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 பிராசஸர்,
2. டாப் எண்ட் மாடல்- 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 பிராசஸர்
58வாட் பேட்டரி ஆதரவினைக் கொண்டதாகவும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி சிறந்த ஆடியோ வசதி, வைஃபை, யுஎஸ்பி போர்ட்,3.5எம்ம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.