லாவா நிறுவனம் தற்போது லாவா இசெட்41 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் வகையானது, ரூ.3,899 என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இவ்வளவு மலிவான விலையில் வெளியான இந்த ஸ்மார்ட்போனுக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 5எம்பி பின்புற கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் முன்புறத்தில் 2எம்பி கொண்ட கேமராவும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இது 480 x 854 என்ற அளவிலான பிக்சல் திர்மானத்தினைக் கொண்டுள்ளது,
மேலும் இது குவாட்-கோர் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஸ்ப்ரெட்ரம் SC9832E சிப்செட் வசதியை கொண்டு இயங்கும் தன்மையானது. இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது, கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவினையும் இது கொண்டுள்ளது.
இது 2500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக்கூடியதாக உள்ளது, மேலும் இது, 4ஜி வோல்ட்இ, ஒடிஜி, எஃப்எம் ரேடியோ, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை இது கொண்டுள்ளது.