ஏசர் நிறுவனம் தற்போது இந்தியாவில் ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
புதிய ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் 15.6 இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவினையும், ஏசர் ஆஸ்பையர் 7 கேமிங் லேப்டாப் சாதனம் இன்டெல் 9-வது ஜெனரல் கோர் சிபியுக்களைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த லேப்டாப் ரைசன் 3000 தொடர் சிபியுக்களைக் கொண்டதாகவும் உள்ளது. இந்த ஏசர் லேப்டாப் ஆனது பிரத்யேக என்விடியா ஜிடிஎக்ஸ் தொடர் கிராபிக்ஸ் அட்டையைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த லேப்டாப் டிடிஆர் 4 ரேம் மற்றும் 1 டிபி வரை மெமரி ஆதரவினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த லேப்டாப் வைஃபை 6, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் ஏசரின் ட்ரூ ஹார்மனி ஆடியோ தொழில்நுட்பமும் கொண்டுள்ளது. ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் மாடல் முழு எச்டி டிஸ்ப்ளேவினையும் கொண்டுள்ளது.