ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா நிறுவனங்கள் இணைந்து நோக்கியாவின் 43 இன்ச் 4K Ultra HD ஸ்மார்ட் டிவியினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த நோக்கியா ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியானது 4K எச்டிஆர் எல்இடி டிஸ்ப்ளே 3840 x 2160 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்டுள்ளது.
இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவி டால்பி விஷன் தொழில்நுட்பம் மற்றும் வைடு கலர் காமெட் தொழில்நுட்பம், MEMC தொழில்நுட்பம், இன்டெலிஜண்ட் டிம்மிங் கொண்டுள்ளது.
மேலும் இந்த டிவியானது 1 ஜிகாஹெர்ட்ஸ் பியூர் எக்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர் உடன் மாலி 450MP4 GPU கொண்டு இயங்குகின்றது. மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட் டிவி 2.25 ஜிபி ரேம்

16 ஜிபி மெமரி கொண்டுள்ளது. இந்த 43 இன்ச் 4K Ultra HD டிவியானது மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது.
இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி அண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த டிவியானது வைபை, ப்ளூடூத் 5, 3xHDMI, 1xUSB 2.0, 1xUSB 3.0, ஈத்தர்நெட் போன்ற ஆதரவுகளைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவி ஆடியோவினைப் பொறுத்தவரை 24 வாட் ஸ்பீக்கர்கள், ஜெபிஎல் சவுண்ட், டால்பி ஆடியோ, டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் கொண்டுள்ளது. இந்த டிவியில் கூகுள் அசிஸ்டண்ட், பில்ட்-இன் குரோம்காஸ்ட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.