ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் ஆகியுள்ளது.
இந்த ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மேட் கோல்ட் வண்ணங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் புல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் மேலும் 20:9 அளவிலான திரை விகிதம் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. மேலும் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.
மேலும் ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
மேலும் ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைட் ஆங்கிள் கேமரா, 2எம்பி மோனோக்ரோம் சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும் மேலும் 16எம்பி பிரைமரி சென்சார் மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் போன்ற டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.
இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.
மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 30W வூக் ஃப்ளாஷ் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக 4ஜி வோல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் கொண்டுள்ளது.
மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ எஃப் 17 ஸ்மார்ட்போன் ஆனது விருப்பங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.