Mobile

அறிமுகமானது ஒப்போ ரெனோ 5ஜி ஸ்மார்ட்போன்!!

ஒப்போ நிறுவனத்தின் ரெனோ4 5ஜி ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒப்போ ரெனோ 5ஜி  ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 5ஜி ஸ்மார்ட்போன்6.43 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 2.5D 90Hz AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை  கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சத்தினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் கொண்டு இயங்குவதாய் உள்ளது, மேலும் இது அட்ரினோ 620 GPU கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) / 256 ஜிபி (UFS 2.1) மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் ஒப்போ ரெனோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டு இயங்குவதாய் உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது கலர்ஒஎஸ் 7.2 கொண்டுள்ளது, கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில்  48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 119° அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மோனோ லென்ஸ் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 32 எம்பி செல்ஃபி கேமராவினையும், 2 எம்பி போர்டிரெயிட் கேமராவினையும், .  2 எம்பி போர்டிரெயிட் கேமராவினையும் கொண்டுள்ளது.  பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் இது 4020 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

கூகிள் பிக்சல் 4 மற்றும் கூகிள் பிக்சல் 4 எக்ஸ்எல் இன் அம்சங்கள்!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது Lava Z66 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

நாளை சீனாவில் களம் இறங்குகின்றது ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil