Mobile

அறிமுகமானது எல்ஜி கியூ 61 ஸ்மார்ட்போன்!

எல்ஜி நிறுவனத்தின்  எல்ஜி கியூ 61 ஸ்மார்ட்போனது தென் கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் எல்ஜி கே 61 இன் மறுபெயரிடப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது மே 29 முதல் தென் கொரியாவில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகின்றது. LG கியூ 61 ஸ்மார்ட்போன் ஆனது, 6.5 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளேவினையும், மேலும் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் செயலியினையும் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க வசதி கொண்டதாக உள்ளது.

அறிமுகமானது எல்ஜி கியூ 61 ஸ்மார்ட்போன்!

கேமரா அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பினைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 48 மெகாபிக்சல் பிரதான சென்சார், 8 மெகாபிக்சல் சூப்பர் வைட் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில் செல்ஃபி எடுக்க 16 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது எல்டிஇ, என்எப்சி, புளூடூத் 5, டூயல்-பேண்ட் வைஃபை போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

ஜனவரி மாதம் அறிமுகமாகவுள்ள விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நோக்கியா 8.1 மீது அசத்தலான விலைக்குறைப்பு!

TechNews Tamil

அறிமுகமானது ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil