ஓப்போ நிறுவனம் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிசன் ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 60 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் மற்றும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி பதிப்பினைக் கொண்டுள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.
லம்போர்கினி எடிசன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஆனது எடிசன் 3-டி ரிட்ஜ் ஃபோர் லேயர் கார்பன் பைபர் போன்ற பின்புற அமைப்பைக் கொண்டுள்ளது.
மேலும் இது, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் இது அல்ட்ராவிஷன் 120 Hz டிஸ்ப்ளே வசதியினையும் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை, கார்னிங் கொரில்லா க்ளாஸ் 6 பாதுகாப்பு அம்சத்தினைக் கொண்டதாகவும், ஆக்டோகோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஓசி வசதி கொண்டதாகவும் உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை சோனி ஐஎம்எக்ஸ் போன்றவற்றுடன் 3 கேமரா அமைப்புகளைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 32 மெகாபிக்சல் கேமரா வசதி கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4260 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது, 65வாட்ஸ் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.
மேலும் 512 ஜிபி வரை விரிவாக்க மைக்ரோ எஸ்டி கார்டு வசதி 5ஜி ஆதரவினைக் கொண்டுள்ளது.