ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் 4கே ஹைப்ரிட் பாக்ஸ் என்றும் அழைக்கப்படும் இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் ஆனது இந்தியாவில் ரூ.3,999-க்கு வாங்க கிடைக்கும்.
செட்-டாப் பாக்ஸ் ஆண்ட்ராய்டு 9.0 பை கொண்டு இயங்குகிறது. இது பயனர்களுக்கு கூகுள் பிளே ஸ்டோருக்கான
அணுகலையும் வழங்குகிறது, மேலும் அமேசான் ப்ரைம்
வீடியோ, நெட்ஃபிக்ஸ் மற்றும் யூடியூப் போன்றவைகளை பதிவிறக்கம் செய்யவும்
அனுமதிக்கிறது.

ஏர்டெல் இன்டர்நெட் டிவி செட்-டாப் பாக்ஸைப்
போலவே, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் ஆனதும் ப்ளூடூத் இணைப்பைத் தவிர, வைஃபை இணைப்பு மற்றும் உள்ளமைக்கப்பட்ட Chromecast உடன் வருகிறது. இது ஒரு Universal remote உடன் வருகிறது.
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்டிக், இது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸின் பெரும்பாலான அம்சங்களை
வழங்குகிறது.
இது அதன் ப்ரீ-லோடட்ட் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப்பின் கீழ் மேலே
குறிப்பிடப்பட்டுள்ள அதே OTT சேவைகளுக்கான அணுகலை
வழங்குகிறது. அத்துடன் பயனர்களுக்கு நெட்ஃபிலிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ
மற்றும் யூடியூப் அணுகலை வழங்கும் கூகுள் பிளே ஸ்டோர் ஆதரவையும் கொண்டுள்ளது. இது
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவை அடிப்படையாக
கொண்டது.
இந்தியாவில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்டிக்கின்
விலை ஆனது ரூ.3,999 என்று
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.