Mobile

புதிய அப்டேட்டுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.!

ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை, 48 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமராவுடன் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இல் உள்ள பின்பக்க கேமரா எல்.இ.டி யுடன் பின்பக்கம் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளது.

ஏ.ஐ அல்ட்ரா கிளியர் என்ஜின் தொழிநுட்பத்துடன் கூடிய 48 மெகா பிக்சல் கேமரா சேவையினை பயன்படுத்தி இருட்டில் கூட உங்களால் சிறந்த புகைப்படத்தை கிளிக் செய்ய முடியும். ஏ.ஐ உதவியுடன் செயல்படும் இந்த கேமரா உங்களுக்கு மிகத் துல்லியமாகும் சிறப்பாகவும் செயல்படுகிறது.

புதிய அப்டேட்டுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.!

இந்த கேமரா சிறந்த வீடியோ மற்றும் போட்டோ சேவையைப் பயனருக்கு வழங்குகிறது. அதுமட்டுமின்றி எப்11 ஸ்மார்ட்போன் வெளிச்சம் குறைந்த இடத்திலும், இருள் சூழ்ந்த இடத்திலும் சிறப்பாக செயல்படுவதற்கு புதிதாய் அல்ட்ரா நைட் மோடு என்ற ஒரு சேவை மோடை ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இருட்டில் சிறந்த போட்டோ அனுபவத்தை வழங்குவதற்காவே இந்த அல்ட்ரா நைட் மோடு சேவை பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

பனோராமிக் ஸ்கிரீன் என்று அழைக்கும் முழு ஸ்கிரீன் டிஸ்பிளே கொண்ட புது டீஸரையும் ஒப்போ நிறுவனம் அண்மையில் வெளியிட்டு, தனது வாடிக்கையாளர் மற்றும் ஸ்மார்ட்போன் சந்தை போட்டியாளர்களையும் தன்பக்கம் திரும்ப வைத்துள்ளது.

ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் இல் ஒப்போ நிறுவனம் புதிய 48 மெகா பிக்சல் முன்பக்க ரைசிங் கேமராவை பொருந்தியுள்ளது. செல்பி பிரியர்களுக்கு அட்டகாசமான சிறந்த சேவையை வழங்க இந்த ரைசிங் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சிங்கள் கிளிக் செல்ஃபீ பட்டனை கிளிக் செய்தவுடன் ஒப்போ எப்11 ப்ரோ இன் ரைசிங் கேமரா போன் இன் முன்பக்கத்தின் உள்ளிருந்து தோன்றும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒப்போ எப்11 ப்ரோவில் வழங்கப்பட்டுள்ள 48 மெகா பிக்சல் கேமரா சிறந்த செல்பி அனுபவத்தை வழங்குகிறது.

Related posts

பல அம்சங்களுடன் அறிமுகமான மோட்டோரோலா ஒன் ஆக்ஷன்!

TechNews Tamil

Funtouch OS 9.1 உடன் களமிறங்கிய Vivo Z1x இன் சிறப்பம்சங்கள்!

TechNews Tamil

மார்ச் மாதம் அறிமுகமாகவுள்ள மோட்டோ ஜி8 பிளஸ்!

TechNews Tamil