சீனாவில் உற்பத்தியான இந்த வைரஸ், உலகம் முழுவதும் உள்ள 25 நாடுகளில் தற்போது பரவியுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் பல வகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும், கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த முடியவில்லை.
2020 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பார்சிலோனாவில் பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற இருந்தது. உலக நாடுகளில் இருந்து ஏறக்குறைய 200 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த விழாவில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

கொரானோ அச்சுறுத்தல் காரணமாக, கலந்து கொள்ள இருந்த நிறுவனங்கள் பலவும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் கலந்த கொள்ள மாட்டோம் என அறிவிப்பினை வெளியிட விழாவிற்கான ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டது.
இந்த விழாவினை ஜி.எஸ்.எம்.ஏ. அமைப்பு ரத்து செய்வதாக அறிவித்தது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால், மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்களும் சமீபத்தில் கால வரையற்ற விடுமுறையினை சீனாவில் உள்ள அலுவலகங்களில் அறிவித்ததை அடுத்து, ஒவ்வொரு நிறுவனங்களும் தனது விடுமுறையினை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.