உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களில் ஒன்று பேஸ்புக். இந்தியாவில் கோடிக்கணக்கான பேஸ்புக் பயனாளர்கள் உள்ளனர். பேஸ்புக்கில் அடுத்தடுத்து புது அப்டேட் வந்த வண்ணம் உள்ளது.
பேஸ்புக் நிறுவனம் பயனர்களைக் கவரும் வகையில் அவ்வப்போது சிறப்பு அம்சங்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி ஆளாக்கும் அந்தவகையில் அதன் செயலியான இன்ஸ்டாகிராம் செயலியில் சிறப்பு அம்சமாக லைட் செயலியை வெளியிட்டுள்ளது.
அதாவது பயனர்களைக் கவரும் வகையிலான இந்த இன்ஸ்டாகிராம் லைட் செயலியின் மூலம் பயனர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அதாவது இன்ஸ்டாகிராம் லைட் செயலியானது மெமரி அளவில் 2 எம்பி அளவு கூட இல்லை என்று கூறப்படுகின்றது. மெமரி அளவு குறைவு என்பதால் நிச்சயம் இதன் வேகம் குறையலாம் எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இன்ஸ்டாகிராம் லைட் செயலி வேகமாக இயங்கும் தன்மை கொண்டது என்று கூறியுள்ளனர்.
மேலும் இந்த செயலியானது முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் முதற்கட்டமாக இன்ஸ்டாகிராம் லைட் செயலி ஆங்கிலத்துடன் இன்னபிற பிராந்திய மொழிகளிலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.