Apps

ஸ்மார்ட்போனில் மட்டும் உள்ள Instagram டெஸ்க்டாப்பிலும் வருகிறது!

இன்ஸ்டாகிராம் நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ் ஆப்பிற்கு அடுத்தபடியாக அதிக பயனர்களைக் கொண்ட ஒரு செயலியாக இருந்து வருகிறது.

மிகவும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள இன்ஸ்டாகிராம் சேவையானது, தற்போது டெஸ்க்டாப் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இந்த DM வெப் மெசேஜ்ஜிங் அம்சமானது சில பயனர்களுக்கு மட்டும் சோதனை ஓட்டமாக அறிமுகமானது. இந்த சோதனை வெற்றி கண்டதால் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

ஸ்மார்ட்போனில் மட்டும் உள்ள Instagram டெஸ்க்டாப்பிலும் வருகிறது!

அதாவது இதுவரை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சேவையானது, கணினித் திரையில் பயன்படுத்தும் வகையில் டெஸ்க்டாப் வெர்ஷனாக DM வெப் மெசேஜ்ஜிங் அம்சமாக வெளியிட்டுள்ளது.

அதாவது  ஸ்மார்ட்போன்களைத் தாண்டி கணினியில் பயன்படுத்தப்படும் இந்த சேவையானது வணிகங்கள், விற்பனையாளர்களுக்குப் பணம் செலுத்துபவர்கள் மற்றும் ஏராளமான டிஎம்களை அனுப்புபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று இன்ஸ்டாகிராம் நிறுவனம் கூறியுள்ளது.

இன்ஸ்டாகிராமின் டெஸ்க்டாப் சேவையானது,  மொபைலில் உள்ள  சாதாரண சேவையினைப் போன்றதாகவே இருக்கும். இதன்மூலம் டெஸ்க்டாப்பில் மெசேஜ் அனுப்பியது போன்றே அனுப்ப முடியும். மேலும் இந்த டெஸ்க்டாப் சேவையிலும் குழுக்களில் சேட் செய்ய முடியும்.

Related posts

வாட்ஸ்அப்பில் ஃபேஸ்புக் மெசஞ்சர் ரூம்ஸ் சேவைக்கான ஷார்ட்கட்!!

TechNews Tamil

ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பப்ஜி லைட் செயல்படாது..!!

TechNews Tamil

போன் நம்பர் வேண்டாம்.. இனி ஈமெயில் மூலமே கால் பண்ணலாம்!!

TechNews Tamil