ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தனியுரிமை, போலி செய்திகள் வெறுப்பு பிரச்சாரம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட தீர்க்கப்படாத கேள்விகளை இன்னும் எதிர்கொண்டு தான் இருக்கிறது.
சில சமயங்களில் ஃபேஸ்புக் நிறுவனம் தான் சிறந்த விஷயங்களுக்கு மதிப்பு கொடுக்க தவறுகிறது. பயனாளர்கள் கூறுவதை நடைமுறைப்படுத்துவதிலும், வளர்ந்து வரும் பிளவுபட்ட உலகில் நடுநிலையான தளமாக நிலைப்பதிலும் ஆடிப் போய் உள்ளது.

பாதுகாப்பின்மை அபாயம் தொடர்ந்து பேஸ்புக்கில் பயனர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது.
அதாவது ஃபேஸ்புக் பயன்பாட்டை பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள் மற்றும் பயனர் சாதனத்தின் தகவல்கள் போன்றவை இணையத்தில் விற்பனை செய்து வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இணையத்தின் டார்க் வெப் பகுதியில் இந்தத் தகவல்கள் வெளிப்படையாக விற்பனைக்கு வந்துள்ளது குறித்து பலமுறை தகவல்கள் வெளியாகின.
அதாவது, டார்க் வெப்பில் இதுவரை 267 மில்லியன் கணக்குகளின் சுய தரவுகள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.41,600 க்கு விற்கப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் சைபிள் கண்டுபிடித்துள்ளது.
டார்க் வெப்பில் விற்கப்படும் தரவுகளில் மின்னஞ்சல், தொலைபேசி எண், பேஸ்புக் ஐடி, வயது, கல்வித் தகுதி, புகைப்படங்கள் போன்ற தகவல்கள் உள்ளன.