ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மார்ச் 24 ஆம் தேதி சீனாவில் அறிமுகமானது, சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் இதன் மேம்பட்ட அம்சம் காரணமாக பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றது.
சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் போக்கோ எஃப்2 என்ற பெயரில் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்திய பயனர்கள் இந்த ஸ்மார்ட்போன் வெளியாவது குறித்து எதிர்பார்த்துக் காத்திருக்க, அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் போக்கோ எஃப்2 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று வெளியான தகவல் உண்மை கிடையாது. போக்கோ எஃப்2 ரெட்மி கே30 ப்ரோ மாடலின் அம்சத்தினை விட மேம்பட்ட அம்சம் கொண்டது என போக்கோ நிறுவனத்தின் பொது மேலாளர் சி மன்மோகன் தெரிவித்து உள்ளார்.
இந்த போக்கோ எஃப்2 ஸ்மார்ட்போனின் உற்பத்தி விரைவில் துவங்கும் என்றும், அதற்கான இறுதிக்கட்ட சோதனைகள் நடைபெறுவதாகவும், கூறியுள்ளார்.
இந்தத் தகவல்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.