இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது இன்பினிக்ஸ் ஜிரோ 5 ஸ்மார்ட்போனை இந்தோனேசியாவில் வெளியிட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் ஜிரோ 5 ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
மேலும் 90Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி Sony IMX696 பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி லோ லைட் கேமரா போன்றவற்றினையும் 48எம்பி + 8எம்பி டூயல் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி ஆக்டோ-கோர் பிராஸசர் வசதி கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஜிரோ 5 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஜிரோ 5 ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.