டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டு உள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 ஸ்மார்ட்போன் டோபாஸ் புளூ, குவாட்ஸ் கிரீன் மற்றும் அப்சிடியன் பிளாக் வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.1 இன்ச் ஹெச்டி பிளஸ் டிராப் நாட்ச் வசதியினைக் கொண்டதாகவும் மேலும், மீடியாடெக் ஹீலியோ ஏ20 குவாட்கோர் பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது கேமராவினைப் பொறுத்தவரை, 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.
மேலும் கூடுதல் சிறப்பு அம்சமாக, டூயல் எல்இடி பிளாஷ், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 மாடல் ஆனது டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாக உள்ளது.