Mobile

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் எச்டி பிளஸ் ஐபிடிஸ் எல்சிடி டிஸ்பிளே, 1600 x 720 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போன் UNISOC SC9863A சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போன் வெளியீடு!

இயங்குதளமாக XOS 7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பின்புறம் 8எம்பி பிரைமரி கேமரா, மற்றும் 5எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

மெமரி அளவாக 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவாக இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை வெளியிட்ட சிஇஓ!!

TechNews Tamil

சீனாவில் வெளியாகியுள்ள ஹூவாய் நிறுவனத்தின் நோவா 8 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மலிவு விலையில் இன்ஃபினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil