இன்பினிக்ஸ் நிறுவனம் நைஜீரியாவில் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் ஐஸ் ப்ளூ, மிட்நைட் பிளாக் மற்றும் குவெட்சல் சியான் ஆகிய மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் டிஸ்விளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1640 x 720 பிக்சல் தீர்மானம் கொண்டதாகவும் பிரைட்நஸ் வசதியைக் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இது 1.8ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் வசதியைக் கொண்டதாகவும், 1.3ஜிகாஹெர்ட்ஸ் சிபியு மற்றும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாகவும் உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார் + இரண்டு QVGA சென்சார் போன்றவற்றினையும் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.
மேலும் இது 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவினைக் கொண்டதாக உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இரட்டை 4 ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 4.2, ஜிபிஎஸ், இரட்டை சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.