இன்பினிக்ஸ் நிறுவனம் நாளை முதல்முறையாக தனது இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளது.
1. இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை – ரூ.9,999
இந்த ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.
இந்த இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2220 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கோண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், லோ லைட் சென்சார் போன்ற கேமரா வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் முன்புறத்தில் 16எம்பி பாப்-அப் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4000எம்ஏச் பேட்டரி வசதியினைக் கொண்டு உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், டூயல் சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட். 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.