இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் எஃப்.ஹெச்.டி. பிளஸ் நோ நாட்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.
1. இன்ஃபினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை – ரூ. 9,999
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மார்ச் 13 ஆம் தேதி துவங்குகிறது.
மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதி கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜி.பி. ரேம் LPDDR4 வசதி மற்றும் 64 ஜி.பி. மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 எக்ஸ் ஒ.எஸ். இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU வசதி கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 48 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சாரினைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 16 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது.
இணைப்பு விருப்பத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி. போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் இது
4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.