Infinix S5 ஸ்மார்ட்போன், செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில், அக்டோபர் 21 முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும்.
இந்த ஸ்மார்ட்போன் hole punch டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமிராவைக் கொண்டுள்ளது.
Infinix S5 இன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வகையின் விலை -8,999 ரூபாய்.

இது Android 9.0 Pie அடிப்படியாகக் கொண்டு இயங்கும் தன்மையானது. இது 6.6 இஞ்ச் HD டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 720×1600 பிக்சல்கள் தீர்மானத்தினைக் கொண்டதாக உள்ளது.
இது குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் f/1.8 aperture உடன் 16 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 2 மெகாபிக்சல் சூப்பர் மேக்ரோ லென்ச், 5 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் கேமிரா உள்ளது.
இது 64 ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் வருகிறது. இந்த போன் 4,000mAh பேட்டரி கொண்டு இயங்குகிறது.