Mobile

சிறப்பான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான டிரான்சிஷன் நிறுவனம் இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் ஆனது  6.95 இன்ச் 1640×720 பிக்சல் ஹெச்டி+ 20.5:9 பின்ஹோல் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் ஏஆர்எம் மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை  இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை எக்ஸ்ஒஎஸ் 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது, மேலும் கேமரா அளவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, லோ லைட் வீடியோ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ் மற்றும் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி போன்றவற்றினையும், பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

Related posts

இந்தோனேசியாவில் அறிமுகமாகியுள்ளது ரியல்மி சி12 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

விறுவிறுவென விற்றுத் தீர்ந்து வரும் ஓப்போ A12 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் அறிமுகமான நோக்கியா 2.3!

TechNews Tamil