Mobile

அறிமுகமானது இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன்!!

இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் நோட் 7 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் ஆனது 6.95 இன்ச் எச்டி  இன்ஃபினிட்டி-ஓ எல்சிடி டிஸ்ப்ளேவினையும், 1640 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது 2GHzஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 70 செயலி வசதி கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் வசதி, போன்றவற்றினை பின்புறத்தில் கொண்டு உள்ளது. மேலும் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் XOS 6.0 ஐ அடிப்படையாகக் கொண்ட Android 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது. மேலும் இது 5000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது  4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என் / ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை ஸ்கேனர்  மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆதரவைக் கொண்டுள்ளது.

Related posts

ரூ. 3000 விலைக்குறைப்பில் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் நாளை அறிமுகமாகிறது ஹானர் எக்ஸ் 10 மேக்ஸ்!!

TechNews Tamil

அறிமுகமானது மலிவு விலை மோட்டோ டி.வி.க்கள்!!

TechNews Tamil