Mobile

அறிமுகமானது அசரவைக்கும் அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன்!

இன்பினிக்ஸ் நிறுவனம் அதம் புதிய இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் முதல் வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி வகையின் இந்திய விலை- ரூ.7,870

இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.6 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், 1520 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

அறிமுகமானது அசரவைக்கும் அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஏ25 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி கொண்டதாகவும், மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 16எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், போன்ற நான்கு கேமராக்களைக் கொண்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியானது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலைகுறைப்பு!!

TechNews Tamil

ரூ.7600 வரை விலை அதிகரிக்கப்பட்ட ஐபோன் விலை!! சோகத்தில் ஐபோன் விரும்பிகள்!!

TechNews Tamil