மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.78 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 20: 9 விகித விகிதம் கொண்டுள்ளது.
மேலும் 4 ஜிபி எல்பிடிடிஆர் 4 ரேம் கொண்டதாகவும், இந்த இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் மூலம் இயங்குவதாக உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 64 ஜிபி உள் சேமிப்பை 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் விரிவாக்கம் செய்வதாக உள்ளது.
கேமரா அளவாக இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஸ்மார்ட்போன் 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், ஏ.ஐ. லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் AI செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
மேலும் இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஸ்மார்ட்போன் பேட்டரி அளவாக 5,000mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஸ்மார்ட்போன் டூயல் எல்.இ.டி. பிளாஷ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.