Mobile

நாளை அறிமுகமாகவுள்ள இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போனை நாளை இந்தியாவில் வெளியிட உள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் குறித்து ஆன்லைனில் கசிந்துள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 11 6.82 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720×1,640 பிக்சல் தீர்மானம் கொண்டதாக இருக்கலாம்.

நாளை அறிமுகமாகவுள்ள இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன்!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்த்த பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஒசி பிராசஸர் வசதியினைக் கொண்டதாக இருக்கலாம்.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாக உள்ளது.

மேலும் இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டு இருக்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், ஏஐ லென்ஸ் மற்றும் 8எம்பி செல்பீ கேமரா வசதியினைக் கொண்டு இருக்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18-வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டு இருக்கலாம்.

வைஃபை, 4 ஜி, புளூடூத், ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி போர்ட் மற்றும் எஃப்.எம் ரேடியோ போன்றவற்றினை இணைப்பு ஆதரவாகக் கொண்டு இருக்கலாம்.

Related posts

மார்ச் மாதம் வெளியாகவுள்ள போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இத்தாலியில் அறிமுகமானது அசுஸ் ரோக் போன் 3 கேமிங் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஹானர் 30ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil