Mobile

களமிறங்கத் தயார் நிலையில் இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் குறித்து ஆன்லைனில் கசிந்துள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 11 6.82 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720×1,640 பிக்சல் தீர்மானம் கொண்டதாக இருக்கும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்த்த பார்த்த மீடியாடெக் எம்டி6769 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக இருக்கும்.

களமிறங்கத் தயார் நிலையில் இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன்!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாக உள்ளது.

மேலும் இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம், 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டு இருக்கும்.

இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 எம்பி ப்ரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வசதியினைக் கொண்டதாக இருக்கும்.

இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18-வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டு இருக்கும்.

வைஃபை டூயல் 4 ஜி வோல்ட்-இ ஜி.பி.எஸ் புளூடூத் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினை இணைப்பு ஆதரவாகக் கொண்டு இருக்கும்.

Related posts

கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி!

TechNews Tamil

மலேசியாவில் அறிமுகமானது ஸ்பெஷல் ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது விவோ நிறுவனத்தின் ஒய்52எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil