Mobile

பாகிஸ்தானில் இன்று வெளியானது இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன்!

இன்பினிக்ஸ் நிறுவனம் பாகிஸ்தானில் இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனை இன்று வெளியிட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி 70 கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது, மேலும் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் 720×1640 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

பாகிஸ்தானில் இன்று வெளியானது இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன்!

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் ஆனது 6.78 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் பஞ்ச்-ஹோல் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார், இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்கள் மற்றும் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது அண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது, மேலும் எக்ஸ்ஓஎஸ் 7 மூலம் ஹாட் 10 இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் வழியாக 10W சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை, 5200 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, 4 ஜி, ஜி.பி.எஸ், புளூடூத், 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் நவம்பர் 25 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ள விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமான விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil