மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் 6.82 இன்ச் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் 720×1640 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஜி 35 ஆக்டா கோர் சிப்செட் வசதியினைக் கொண்டதாக உள்ளது.
மெமரி அளவாக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாகக் கூடுதல் உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டதாக உள்ளது.
கேமரா என்னும்போது 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் சென்சார் பஞ்ச் ஹோல் நாட்ச் கொண்டதாக உள்ளது.
பேட்டரி அளவு என்னும்போது 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.
இயங்குதளம் என்று பார்க்கையில் இன்பினிக்ஸ் ஹாட் 10 ப்ளே ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் கூடுதல் அம்சமாக மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட், கைரேகை சென்சார் அம்சம், ஃபேஸ் அன்லாக் அம்சம் கொண்டதாக உள்ளது.