Apps

டிக்டாக் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இந்தியாவின் ஜியோ நிறுவனம்!!

இந்திய – சீன எல்லைப் பகுதியில் பதட்டம் நிலவிவந்த நிலையில், திடீரென சமீபத்தில் சீன ராணுவம் தாக்குதல் நடத்தியது.

அதன்பின்னர் சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது குறித்த கருத்துகள் இந்தியாவில் நிலவி வந்தநிலையில் சீன அரசின் 52 செயலிகளை தடைசெய்ய வேண்டும் என இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்தவகையில் இந்தியர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பினை பெற்ற டிக்டாக் செயலி, ஹலோ ஆப், ஷேர் இட் போன்ற செயலிகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செயலிகள் தடைசெய்யப்பட்டதால் டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் ரூ. 45 ஆயிரம் கோடி இழப்பை எதிர்கொண்டுள்ளது.

டிக்டாக் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இந்தியாவின் ஜியோ நிறுவனம்!!

மேலும் இந்த செயலியால் அதிக அளவிலான சீன வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்தியாவில் டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ்  மீண்டும் இந்தியாவுக்குள் கால் பதிக்கத் திட்டம் தீட்டி வருகின்றது.

இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனமும் பைட்டான்ஸ் நிறுவனமும்  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மேலும் அமெரிக்காவிலும் இன்னும் 45 நாளில் டிக்டாக் தடைசெய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கத

அமெரிக்காவில் டிக்டாக்கினை நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனமும், டுவிட்டர் நிறுவனமும் முதல்கட்ட பேச்சுவார்த்தையினை நடத்தி முடித்துள்ளது.

Related posts

பல சாதனங்களில் ஒரே வாட்ஸ் ஆப் அக்கௌண்ட்டை பயன்படுத்தலாம்!!

TechNews Tamil

JioPOS செயலி மூலம் மற்றவர்களுக்கு ரீசார்ஜ் செய்தால் 4.5% கமிஷன் – ஜியோ!

TechNews Tamil

ஸ்னாப் சேட்டை விட அதிக பயனர்களைக் கொண்ட பிக்ஸாலைவ்!

TechNews Tamil