சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியின் பிரைவசி கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு விதிகள் மாற்றி அமைக்கப்பட்டது.
அதாவது சமீபத்தில் இந்தப் பாலிசியில் பயனர்கள் வாட்ஸ்அப்பினை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் இணையத்தில் எதுபோன்ற சேவைகளைப் பயன்படுத்துகின்றனர் என்பது போன்ற பிற இணையப் பயன்பாடுகளையும் கண்காணிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகின.
இதனால் வாட்ஸ் அப் பயனர்கள் பலரும் தங்களின் தனியுரிமையினைப் பாதிப்பதாக நினைத்து வாட்ஸ் ஆப் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பிரைவசி பாலிசியில் மாற்றம் செய்வது குறித்த நடவடிக்கையை கைவிட அறிவுறுத்தியது.

இந்தநிலையில் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்த கருத்துக் கணிப்பானது குருகிராமின் ஆய்வு நிறுவனமான சைபர்மீடியா ரிசர்ச் ஆய்வை மேற்கொண்டது.
இந்த நிறுவனம் இறுதியில் வெளியிட்ட கருத்துக் கணிப்பின்படி, 80% பேர் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியினைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் 28 சதவீதம் பேர் பிரைவசி பாலிசி மாற்றப்பட்டதும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.
மேலும் அதிகம்பேர் தற்போது வாட்ஸ் ஆப்புக்கு மாற்றான டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிக்கு மாறவுள்ளதாகக் கூறியுள்ளனர். அதிலும் சிக்னல் செயலியினைவிட டெலிகிராம் செயலி பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர்.