செப்டம்பர் மாதம் HMD Global நிறுவனம் IFA வர்த்தக கண்காட்சியில் Nokia 6.2 மற்றும் Nokia 7.2 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை, அறிமுகம் செய்தது. இந்த Nokia ஸ்மார்ட்போன், இன்று அறிமுகமானது.
இந்தியாவில் Nokia 6.2-வின் விலை:
1. Nokia 6.2-வின் 3 ஜிபி + 32 ஜிபி மாடலின் விலை – ரூ .15,800 (தோராய விலை)
இந்த ஸ்மார்ட்போன் Nokia 6.2 Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. இது பாதுகாப்பிற்காக Gorilla Glass 3 யினைக் கொண்டுள்ளது.

இது 6.3-inch full-HD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது octa-core Qualcomm Snapdragon 636 SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
சேமிப்பினைப் பொறுத்தவரையில், இது 4 ஜிபி வரை ரேம் கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரையில், இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா உள்ளது. இது 16 மெகா பிக்சல் முன்பக்க கேமிரா, 5 மெகா பிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 8 மெகா பிக்சல் வைடு ஆங்கிள் சூட்டர் போன்றவையும் இதில் உள்ளது.
128 ஜிபி வரை உள்ளடக்க சேமிப்புடன், மைக்ரோ கார்டு மூல 512 ஜிபி வரை நீட்டிக்கலாம். Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, மற்றும் 4G LTE போன்ற இணைப்பு ஆதாரங்களையும் கொண்டுள்ளது.