Apps

சீனாவின் 52 செயலிகளைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ள இந்தியா.. இதோ அந்த 52 செயலிகள் விவரம்!!

சீனாவில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகின் பலநாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. பல லட்சக் கணக்கிலான உயிர்களைக் காவு வாங்கியுள்ள கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வருவதற்குள், சீனா இந்தியா எல்லையில் பிரச்சினையினைக் கிளப்பியுள்ளது.

எல்லைப் பகுதியான லடாக் பகுதியில் சில வாரங்களுக்கு முன்னர் சீன ராணுவம் தீடீரென ராணுவ அமைப்பினை குவித்தது. அதன்பின்னர் தாமதிக்காத இந்திய அரசாங்கம் அதன் ராணுவத்தை குவித்தது.

எல்லையில் இதனால் பதட்டம் நிலவிவந்த நிலையில், திடீரென சீன ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தநிலையில் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் 52 செயலிகளைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ள இந்தியா.. இதோ அந்த 52 செயலிகள் விவரம்!!

இந்தநிலையில் சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது குறித்த கருத்துகள் இந்தியாவில் நிலவி வருகின்றது. அந்தவகையில் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட 52 செயலிகளை புறக்கணிக்க வேண்டும் என இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு இந்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

52 செயலிகள்:

அபஸ் ப்ரவுசர், விவா வீடியோ, வீ-சேட், ஷேர்-இட், யூசி நியூஸ், யூசி ப்ரவுஸர், டிக்டாக், விஹோ வீடியோ, பிகோ லைவர், எம்ஐ ஸ்டோர், 360 செக்யூரிட்டி, டியூ பேட்டரி சேவர், டியூ ப்ரவுசர், டியூ க்ளீனர், டியூ ப்ரைவசி, க்ளீன் மாஸ்டர், ஹலோ, லைக், க்ளப் பேக்டரி, க்செண்டர், ப்யூட்டி ப்ளஸ், போட்டோ வொண்டர், நியூஸ் டாக், ஷீ இன், ரோம்வீ, க்வாய், கேச்சி க்ளியர் டியூ ஆப்ஸ் ஸ்டுடியோ, பெர்பக்ட் கார்ப், சிஎம் ப்ரவுசர், வைரஸ் க்ளீனர், எம்ஐ கம்யூனிட்டி, டியூ ரெக்கார்டர், யூகேம் மேக் அப், இஎஸ் பைல் எக்ஸ்ப்ளோரர், க்யூ க்யூ தொடர்பான செயலி, மெயில் மாஸ்டர் போன்ற செயலிகள்.

Related posts

ஜியோ—வாட்ஸ் ஆப் கூட்டமைப்பில் இந்தியாவில் ஜியோ மார்ட் சேவை துவக்கம்!!

TechNews Tamil

இனி பிளாஸ்டிக் பயன்பாடு கிடையாது- பிளிப்கார்ட்டின் அதிரடி!

TechNews Tamil

தென்கொரியா, சிங்கப்பூரினை அடுத்து இந்தியாவிலும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்!!

TechNews Tamil