Mobile

நோக்கியா 9 பியூர் வியூ மீது நம்பமுடியாத விலைகுறைப்பு!

நோக்கியா நிறுவனத்தின் சமீபத்திய பென்டா-கேமரா ஸ்மார்ட்போன் ஆன Nokia 9 PureView மீது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 
அமேசான் தளத்தில், Nokia 9 PureView ஸ்மார்ட்போனின் மீது ரூ.2,299/- என்கிற தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனின் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் விலை இரண்டுமே இன்னும் ரூ.49,999/- தான் ஆகும், ஆனால் அமேசான் இந்தியா மூலம் அதை வாங்க விரும்புவோர்களுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட சலுகையின் கீழ் ரூ.47,700/-க்கு கிடைக்கிறது. 

நோக்கியா 9 பியூர் வியூ மீது நம்பமுடியாத விலைகுறைப்பு!

ரூ.2,299/- என்கிற தள்ளுபடியைத் தவிரத்து, ரூ.6,000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகையும் அணுக கிடைக்கும். அமேசான் பே மற்றும் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் நோ காஸ்ட் இஎம்ஐ வாய்ப்பு கிடைக்கிறது.

எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் கார்டுகள் கொண்டு கூடுதலாக 5% கேஷ்பேக் கிடைக்கும். எச்எஸ்பிசி கேஷ்பேக் கார்டுகளுக்கு 5 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது. 


இந்த ஸ்மார்ட்போனின் பிரதான அம்சமாக அதன் பென்டா கேமரா அமைப்பு திகழ்கிறது. இது f/1.82 aperture மற்றும் Phase detection auto-focus ஆதரவு கொண்ட 12MP கேமரா உட்பட மொத்தம் ஐந்து கேமராக்களை கொண்டுள்ளது. இதில் மூன்று ஒரே வண்ணமுடைய லென்ஸ் மற்றும் இரண்டு ஆர்ஜிபி சென்சார்கள் ஆகும். 


டிஸ்பிளே: 5.99 இன்ச் அளவிலான QHD+ தெளிவுத்திறன் கொண்ட pOLED ப்ராசஸர்: க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC 
மெமரி: 6 ஜிபி ரேம் + 128 ஜிபி 
கைரேகை சென்சார்: உண்டு 
வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு: உண்டு 
பேட்டரி: 3,320 எம்ஏஎச 
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை உடனான ஆண்ட்ராய்டு ஒன் 

Related posts

சீனாவில் களம் இறங்கியது கூல்பேட் நிறுவனத்தின் கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் நாளை அறிமுகமாகிறது ஹானர் நிறுவனத்தின் ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ.500 விலை அதிகரிப்புடன் விற்பனையாகும் ரெட்மி நோட் 8!!

TechNews Tamil