சமீபத்தில் இந்தியாவில் ஜிஎஸ்டி வரியானது 6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்னர் 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியானது தற்போது 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் மொபைல் போன்களின் விலையானது அதிகரித்துள்ளது. எப்போதும் கூடுதல் விலையில் விற்கும் ஐபோன்களின் விலையும் அதிகரித்துள்ளது.
தற்போதைய ஐபோன்களின் விலை உயர்வினைப் பார்த்தால் பயனர்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியாக இருக்கும். அதிலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 சீரிஸ், ஐபோன் 8 சீரிஸ், ஐபோன் 7 சீரிஸ், ஐபோன் XR மற்றும் ஐபோன் XS போன்ற ஐபோன் மாடல்களின் விலையானது தாறுமாறாக உள்ளது.
அதாவது ஐபோன்களுக்கான வரியானது 5.15 சதவீதத்திலிருந்து 5.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வேரியண்ட் ஐபோன் 7 மாடலின் 32 ஜி.பி. அடிப்படை வகையின் பழைய விலை- ரூ.29,900 (இந்திய மதிப்பில்)

வேரியண்ட் ஐபோன் 7 மாடலின் 32 ஜி.பி. அடிப்படை வகையின் புதிய விலை- ரூ.31,500 (இந்திய மதிப்பில்)
ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடலின் 512 ஜி.பி. உயர் வகையின் பழைய விலை- ரூ.1,43,200
ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடலின் 512 ஜி.பி. உயர் வகையின் புதிய விலை- ரூ.1,50,800
மேலும் இந்த விலை அதிகரிப்பானது ஐபோன் வாடிக்கையாளர்களை மட்டுமின்றி, மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.