இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் பெடரல் வங்கியுடன் இணைந்து iMudra என்ற VISA கார்டு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இந்த கார்டு பயனர்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்வது, பணப் பரிமாற்றம், ஆன்லைன் பண பரிவர்த்தனை சேவைகள், ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது போன்ற பல சேவைகளை இந்த கார்டு வழங்குகிறது.

மேலும் இந்த கார்டானது டிஜிட்டல் கார்டு மற்றும் பிஸிக்கல் கார்டு என்று இரண்டு வகைகளாக அறிமுகம் ஆகிறது. இந்த iMudra கார்டுகளில் டிஜிட்டல் கார்டுகளுக்கு கட்டணம் இல்லாமல் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், மற்றொரு கார்டான பெடரல் வங்கியின் iMudra பிஸிக்கல் கார்டிற்கு ரூ. 236 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வாலெட்டின் குறைந்த பட்ச வரம்பு ரூ. 10,000 என்றும், அதிகபட்ச மாதாந்திர வரம்பு ரூ.1,00,000 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
சாதாரண முறையைப் பின்பற்றி ரயில் பயணச்சீட்டு பதிவு செய்யும் முறையை விட iMudra வை பயன்படுத்தி ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்வது மிக எளிது. அதேபோல் பணப் பரிமாற்ற சேவைகளும் மிகவும் எளிமையான முறையாக உள்ளது.