Apps

முகக்கவசம் அணிந்தால்,, இந்த அம்சம் வழங்குவோம்.. ட்விட்டர் போட்ட கண்டிஷன்!!

ட்விட்டர் நிறுவனம் அவ்வப்போது அதன் பயனர்களுக்கு சிறப்பான அம்சங்களை வழங்கி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் 24 மணி நேரத்தில் மறைந்துபோகும் ஃப்ளீட் வசதியை பயனர்களுக்கு வழங்கியது, அதேபோல் ஐஒஎஸ் செயலியை பயன்படுத்துவோருக்கு வாய்ஸ் ட்விட் செய்யும் புதிய வசதியினை ட்விட்டர் சமீபத்தில் வெளியிட்டது.

அந்தவகையில் தற்போது ட்விட்டர் நிறுவனம் பயனர்களின் நீண்டகாலக் கோரிக்கையினைக் கருத்தில் கொள்வதுபோன்ற ஒரு அம்சத்தினை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமான நிலையிலும் மக்களிடையே இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.

முகக்கவசம் அணிந்தால்,, இந்த அம்சம் வழங்குவோம்.. ட்விட்டர் போட்ட கண்டிஷன்!!

தொடர்ந்து அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தும் நிலையில், அதனை ஆமோதிக்கும் விதமாக ட்விட்டர் நிறுவனம், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய துவங்கினால் தங்களது தளத்தில் எடிட் பட்டன் வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

அதாவது ட்விட்டர் தளத்தில் உள்ள குறைகளில் ஒன்றாக பயனர் பதிவிட்ட ட்விட்களை எடிட் செய்யும் அம்சம் வழங்கப்படவில்லை என்பது இருந்து வருகிறது. மேலும் ட்விட்களை எடிட் செய்வதற்கான வசதியை வழங்குமாறு பயனர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் ட்விட்டர் தற்போது பதிவிட்டுள்ள விஷயம் பயனர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

Related posts

ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் நீக்கப்படுமா? தொடரும் சர்ச்சைகள்!!

TechNews Tamil

வாட்ஸ் அப்பில் உள்ள இந்த சேவை பேஸ்புக்கிலும் வருகிறது!!

TechNews Tamil

வெய்ட்டிங் ரூம், அழைப்புகளை ஷெட்யூல் செய்யும் வசதி என கலக்கும் ஜியோ மீட் சேவை!!

TechNews Tamil