Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியானது ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன்!!

ஐடெல் நிறுவனம் தற்போது ஐடெல் விஷன் 1 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் குறித்த சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் ஆனது  6.088 இன்ச் 1560×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஐஎம்ஜி8322 ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும், மற்றும்  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டதாகவும் உள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியானது ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன்!!

மேலும் ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது, மேலும் கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது

8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 0.3 எம்பி டெப்த் சென்சர் போன்றவற்றினையும், முன்புறத்தில் 5 எம்பி செல்ஃபி கேமராவையும், கைரேகை சென்சார் கொண்டதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை  4ஜி, வைபை, ப்ளூடூத் போன்றவற்றினையும், 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் புளூ நிறங்களில் வெளியாகியுள்ளது.

Related posts

இந்தியாவில் அறிமுகமானது விவோ வை30 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இன்று விற்பனைக்கு வந்த Mi A3 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil